துரியோதனன் ஒரு முறை அவரை போரை விட்டு விலகினால் கர்ணன் போர் புரிய தயாராக இருப்பதாக கூறி நிந்தனை செய்கிறான்.
போரில் வெல்லமுடியாதவர், மரணம் கூட அவர் விரும்பினால் தான் நிகழும் என்று பல கீர்த்திகள் பீஷ்மர் பெற்றிருந்தார். அவர் போர் புரிந்த போது கௌரவர்கள் கையே ஒங்கி இருந்தது.
தேவர்கள் அசுரர்கள் அனைவரையும் ஒரே நாளில் வெல்லதக்கவர் பீஷ்மர் என்று கிருஷ்ணரே கூறிருக்கிறார்.
பீஷ்மர் தன்னை கிருஷ்ணர் அர்ஜுனன் தவிர வேறு யாரும் காயப்படுத்த கூட முடியாது என்று கூறுகிறார் - கவனிக்கவும் காயப்படுத்தத்தான், கொல்ல அல்ல.
பீஷ்மரை கொல்ல முடியாமல் பாண்டவர்கள் தவிக்க தர்மபுத்திரர் நேரில் வந்து அவரை வெல்ல அவரிடமே வழி கேட்பதும் அவர் சிகண்டியை முன் வைத்து அர்ஜுனனை போர் புரிய சொல்வதும் அவரின் பெருந்தன்மையை காட்டினாலும் ஒரு யுத்தத்தில் அது சரியானதாக தோன்றவில்லை.
மேலும் 10-ம் நாள் யுத்தத்தின் இறுதியில் தர்மபுத்திரரிடம் " நான் மிகவும் மனதாலும் உடலாலும் தளர்ந்து விட்டேன். என்னை வீழ்த்துவதற்கு இதுவே தருணம் " என்று கூறி அதன்படியே வீழ்கிறார்.
பாண்டவர்களை எதிர்ப்பது தவறு என்று நினைத்திருந்தால் தளபதி பொறுப்பை அவர் தவிர்த்திருக்கவேண்டும்.
இதற்க்கு சில விளக்கங்கள் கூறப்படுகின்றன.
கிருஷ்ண பரமாத்மா துணை பெற்ற பாண்டவர்கள்தான் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று அவர் ஏற்கனவே அறிந்திருந்தார்.
அவர்களுடன் சமாதானமாக போக துரியோதனுக்கு பல முறை போர் நடக்கும் போதே கூட அறிவுரை கூறியிருக்கிறார், தான் இறந்தாலாவது துரியோதனன் பாண்டவர்களுடன் சமாதானமாக போகக்கூடும் என்று உண்மையாகவே அவர் நம்பி இருக்கலாம்.
இது ஒரு கருத்து.
பீஷ்மர் தான் விளைவித்த பெரும் உயிர் சேதத்தை எண்ணி கவலையுற்று அதனாலேயே மரணத்தை விரும்பி ஏற்றார் என்றும் கூறப் படுகின்றது.
"ஸ்வதர்மம்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 'தன் மனசாட்சிப்படி நடப்பது' என்று பொருள்
மஹா பாரதத்தில் புரிந்து கொண்டதை விட சரியாக புரியாததே அதிகம்.