SHOPPING சமாளிப்பு !!
நீங்கள் உங்கள் மனைவியுடன் கடை வீதிக்கு செல்லுகிறீர்கள். ( நீங்கள் எதற்கா, வண்டி ஓட்டுவதற்கும், பைகளை தூக்குவதற்கும் ஆள் வேண்டாமா ?! )
அப்போது சற்று தூரத்தில் ஒரு அழகான பெண்ணை பார்க்கிறீர்கள், பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள். இதை கவனித்த உங்கள் இல்லாள் உங்களை அக்கினி பார்வை பார்க்கிறார் ( பின்னே கொஞ்சுவார்களா ?! ).
இதை எப்படி சமாளிப்பது என்பதுதான் இன்றைய பயிலகம்.
சமாளிப்பு 1 - எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு !!
- தப்பான பதில்: உடனே Delete செய்து விடுங்கள். இல்லையென்றால் இது மாதிரி எத்தனை பேரை தெரியும், எவ்வளவு காலமாக தெரியும், எப்படி தெரியும் என்று பல கிளை கேள்விகள் கேட்கபட்டு குறைந்தது 10 நாட்களுக்கு சோபாவில்தான் படுக்கை!
ச- 2- அந்த சேலை மாதிரி உனக்கு ஒன்று வாங்கலாமா என்று யோசித்தேன்.
இது பரவாயில்லை. ஆனால் ஆர்வமிகுதியால் சூடிதார் அணிந்திருக்கும் பெண்ணை
பார்த்து இப்படி சொல்லிவிடாதீர்கள்.
நம்புவதற்க்கு கஷ்டமாக இருந்தாலும் 3 சேலைகள் வாங்கபோகும் மகிழ்ச்சியில்
உங்களை மன்னித்துவிடகூடும் !!
என்னது ஒரு சேலையா ! ஒரு பெண் ஒரு கடைக்கு போய் ஒரு சேலை வாங்கியதாக
சரித்திரமே இல்லை பாஸ் !!
ச-3- அந்த பெண் பக்கம் ஏதாவது பாத்திர கடை இருந்தால் “ நீ ஏதோ பாத்திரம் வாங்கவேண்டும் என்று சொன்னாயே” என்று புளுகுங்கள்!
பெண்கள் எப்போதும் ஏதாவது பாத்திரம் வாங்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பதால் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம் !!
ச-4- “ என்ன அந்த பெண் ஓவரா மேக்கப் போட்டுக்கொண்டு அசிங்கமாக டிரஸ் பண்ணிக்கொண்டு நிற்கிறாள்?” என்று கூசாமல் சொல்லுங்கள்,
எல்லா பெண்களுக்கும் தன்னை விட மற்றவர்கள் அனைவரும் மேக்கப், டிரஸ் விசயத்தில்
தன்னை விட மட்டம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது ! ஆகையால் உங்களை நம்புவார்கள்!!
“ சரி. வாங்கள் போகலாம்” என்று சொன்னால் உங்கள் தெரு பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் மானசீகமாக உடைத்துவிட்டு, ஆட்டுக்குட்டி போல் பின் தொடருங்கள்.
அங்கே என்ன பார்வை? என்ன இன்னொரு அழகான பெண் நிற்கிறாளா? ஐயோ. நான் போகிறேன், ஆளை விடுங்கள் !!