This poem was actually written during my house surgeoncy period in 1970 in response to cousin brother's family friend and neighbor K who has then finished his Degree and was searching for a job [soon he got a job in State Bank}
கவி நடை கொண்ட அதன் சாறு உண்டு
ஆனால் கவலை கொண்டேன் நெஞ்சகத்தே நீ
வேலை இல்லாமல் வீட்டில் இருத்தல் கேட்டு .
இலக்கணம் நான் பயிலவில்லை என்று
இயம்பவே நாணுகிறேன் ஆனால் உண்மை அது
இதில் இமாலய தவறுகள் பல இருந்தும்
இருந்திடு பொறுமையுடன் மன்னித்து.
ஹௌசு சர்ஜனுக்கு ஏதோ
மவுசு அதிகம் என்று எழுதிவிட்டாய்
இருப்பது அதிகம் என்று எண்ணமோ
இல்லை அப்பா ஏதும் உண்மையில்.
விந்தை என வந்த உன் கடிதத்தை
விழி அதிராமல் படித்தே முடித்துட்டேன்
விரைவில் பதில் எழுத மனம் கொண்டு
விலாசத்தை தேடுகிறேன் காணவில்லை.
விக்கல் முதல் விதூலம் வரை
வியாதி கண்டு அலுத்திட்டு
விளையாட்டாய் சில நாட்கள் போக்க
விரைந்தே வருகிறேன் வெகு விரைவில் !!
In response K wrote -
விருந்தென வந்தோர்க்கும் மருந்தே குடுக்கும்
மருத்துவர் போல் இல்லாமல்
மருந்தென வந்த எனக்கு கவிதை
விருந்தே படைத்தது விட்டீர் ...நன்றி வணக்கம் .
இலக்கணம் பயிலவில்லை என
இயம்பவே நாணுகிரீர் ஆனால் நானோ
பயின்றும் அன்றும் இன்றும் என்றும்
பண்ணுகிறேன் தினம் போஸ்ட் மார்ட்டம்.
கவி காண எனக்கோ நேரமுண்டு காலமுண்டு -ஆனால்
அக் கவி காண உமக்கோ காலமுண்டோ நேரமுண்டோ
ஹௌசு சர்ஜனுக்கு மவுசு அதிகம் இல்லை என்றால் தினம்
நர்சு கையில் அவுன்சு கிளாசை காண்பவர்க்கு
அலவன்ஸ் கூடியதும் எப்படியோ
காஸ்ட் அதிகம் ஆகிவிட்ட இந்நாளில் காசு
வேஸ்ட் ஆகி விட கூடாது என்றுதான் என்
விலாசத்தை எழுதவில்லை
[ ...க்கு எழுதும் கடிதத்துடன் சேர்த்து விட்டால் காசு மிச்சம் ]
No comments:
Post a Comment